இலங்கையில் பறவைக்காய்ச்சல் தொற்றுடன் ஒருவர் அடையாளம்

Bird Flu Sri Lanka Ministry of Health Sri Lanka
By Raghav Jun 28, 2024 08:45 PM GMT
Raghav

Raghav

இலங்கையில் (Sri Lanka) பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் வெளிநாட்டை சேர்ந்த ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இதன் படி, இந்த நபருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

பறவைக் காய்ச்சல், ஏவியன் இன்ப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது.

இலங்கையில் பறவைக்காய்ச்சல் தொற்றுடன் ஒருவர் அடையாளம் | A Bird Flu Case Has Been Identified In Sri Lanka

இது மனிதர்களைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது.

இதேவேளை, பறவைக்காய்ச்சல் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW