47 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 27 வயது இளைஞர்; தந்தையும் மகனும் கைது!

Sri Lanka
By Nafeel May 06, 2023 02:02 PM GMT
Nafeel

Nafeel

 வெசாக் போயா தினமான நேற்று 47 வயதுடைய பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 27 வயது இளைஞர் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்ய்யப்பட்டுள்ளார்

. சம்பவம் தொடர்பில் கைதான இளைஞன் வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மகனை காப்பாற்றிய தந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடிக்க தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்த இளைஞன், வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது, ​​பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை மடக்கிப் பிடித்த போதும், இளைஞனின் தந்தை வந்து அவரை மீட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இளைஞனும் தந்தையும் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது