நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 13 வயதான சிறுவன்

Matara Sri Lanka
By Majeed Sep 23, 2023 08:05 AM GMT
Majeed

Majeed

கம்புருபிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் தருஷ தினுவர என்பரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் கம்புருபிட்டிய உல்லல்ல பிரதேசத்தில் வசித்து வந்தவர் என்பதுடன், பாடசாலையில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டதன் பின்னர் நண்பர்களுடன் நீராடச்சென்ற நிலையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.

பொலிஸார் தகவல்

நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 13 வயதான சிறுவன் | A 13 Year Old Boy Died After Drowning

நீரில் மூழ்கிய நிலையில், பிரதேசவாசிகளின் தேடுதலில் மூன்று மணித்தியாலங்களின் பின்னரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், மாணவர் உடனடியாக கம்புருபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.