தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கிய சிறுமி உயிரிழப்பு

Jaffna Jaffna Teaching Hospital Death
By Fathima Oct 29, 2023 11:28 PM GMT
Fathima

Fathima

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் தாங்கி வீதி, குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது 10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சென் ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் தரம் 5இல் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வீட்டில் இருந்தபோது கடந்த 21ஆம் திகதி காலை 5 மணியளவில் தலையில் விறைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளார்.

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கிய சிறுமி உயிரிழப்பு | A 10 Year Old Girl Died Jaffna

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (29.) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

இதையடுத்து இடம்பெற்ற பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.