கடந்த 24 மணித்தியாலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Fathima Dec 15, 2025 10:55 AM GMT
Fathima

Fathima

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கைகள்

இந்த நடவடிக்கையின் போது 513 கிராம் ஹெரோயின், 890 கிராம் ஐஸ், 35,349 கஞ்சா செடிகள் உள்ளிட்ட பெருமளவான போதைப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது! | 981 People Arrested In The Last 24 Hours

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முறியடித்தல், போதைப்பொருளுக்கான தேவையை குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை தடுத்தல் ஆகியன இதன் அடிப்படை நோக்கங்களாகும்.

அதற்கமைய, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.