போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்ட உக்ரைன் ரஷ்யா

Ukraine World Russia
By Raghav Jun 27, 2024 03:51 PM GMT
Raghav

Raghav

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்தில் நடந்த பரிமாற்றத்தில் தலா 90 போர்க் கைதிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

டெலிகிராம் அறிக்கையில், ரஷ்ய கைதிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) ஒரு இடைத்தரகராக செயல்பட்டதனால் மூலம் கைதிகள் திருப்பி அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

"இன்று, எங்கள் மக்களில் மேலும் 90 பேர் ரஷ்ய சிறையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்" என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய வீரர்கள்

"ரஷ்ய சிறையில் உள்ள எங்கள் மக்கள் அனைவரையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம். அனைவரையும் விடுவிப்பதற்கான எங்கள் பணியை நாங்கள் தொடர்கிறோம்.

 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்ட உக்ரைன் ரஷ்யா | 90 Russian Ukrainian Prisoners Of War Exchange

விடுவிக்கப்பட்ட வீரர்கள் "சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக" மாஸ்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என்று அதன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, பதிலுக்கு 90 உக்ரேனிய வீரர்களை விடுவித்ததையும் உறுதிப்படுத்தியது. 

போரிடும் இரு தரப்பினருக்கும் இடையிலான கடைசி இடமாற்றம் மே மாத இறுதியில் நடைபெற்றதோடு தலா 75 கைதிகளை பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW