3 மாதத்தில் 850,000 விமானப் பயணிகள்

Bandaranaike International Airport Ranil Wickremesinghe President of Sri lanka
By Mayuri Mar 21, 2024 01:49 AM GMT
Mayuri

Mayuri

விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 மாதத்தில் 850,000 விமானப் பயணிகள் | 850 000 Air Passengers In 3 Months

அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் விடயம்

இந்த வருட இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாதத்தில் 850,000 விமானப் பயணிகள் | 850 000 Air Passengers In 3 Months

2022ஆம் ஆண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்திய மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 05 மில்லியனாக இருந்தது.

அத்துடன், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 08 மில்லியனாக அதிகரிக்க முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.