ஏமன் - கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு (Video)

Yemen Death
By Fathima Apr 20, 2023 08:41 AM GMT
Fathima

Fathima

ஏமன் தலைநகர் சனாவில் நன்கொடை  வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 85 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (20.04.2023) நகரில் பாப்-அல்-ஏமன் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

ரமழான் மாதத்தை முன்னிட்டு அந்நாட்டுத் தலைநகர் சனாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் - கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு (Video) | 85 People Were Killed A Stampede In Yemen

322 பேர் படுகாயம்

அதன்படி பணம், உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்துள்ளர்.

இந்த நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்ததாகவும் 322 பேர் படுகாயமடைந்தனர் என்றும் ஹவுதி தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏமன் - கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு (Video) | 85 People Were Killed A Stampede In Yemen

சிகிச்சைக்காக அனுமதி

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 13 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சனாவில் உள்ள சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏமன் - கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு (Video) | 85 People Were Killed A Stampede In Yemen

விசாரணை

உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, நன்கொடை விநியோகத்திற்குப் பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.