தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 8000 பணியாளர்கள்

Election Commission of Sri Lanka Sri Lanka Election
By Rukshy Jul 18, 2024 07:51 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.

பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கண்காணிப்பாளர்கள் 

ஆரம்ப கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தபால் மூல வாக்களிப்பு கண்காணிப்பாளர்கள், வாக்களிப்பு நிலைய கண்காணிப்பாளர்கள், தேர்தல் நிலைய கண்காணிப்பாளர்கள் என பல்வேறு கட்டங்களாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 8000 பணியாளர்கள் | 8000 Personnel For Election Monitoring Activities

மேலும் நீண்ட கால அடிப்படையில் இரண்டாயிரம் கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW