பாடசாலை மாணவிகளுக்கு விஷம் வைத்த கொடூரம்! ஆப்கானிஸ்தானில் சம்பவம்
Afghanistan
Taliban
Crime
By Chandramathi
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சுமார் 80 பாடசாலை மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானின் சார்-இ-புல் மாகாணத்தின் சங்கராக் மாவட்டத்தில் உள்ள நஸ்வான்-இ-கபோத் ஆப் பெண்கள் பள்ளி மற்றும் நஸ்வான்-இ-ஃபைசாபாத் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
உலக நாடுகள் கடும் கண்டனம்
இந்த இரு பாடசாலைகளிலும் உள்ள சுமார் 80 சிறுமிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம், கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்களின் கையில் சென்றதில் இருந்து பெண்களுக்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.