யாழில் மீண்டும் பாடசாலை சென்ற சிறுமி வைஷாலி

Jaffna Jaffna Teaching Hospital Sri Lankan Schools
By Fathima Sep 19, 2023 08:15 AM GMT
Fathima

Fathima

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கவனக்குறைவினால் தவறான சிகிச்சை வழங்கப்பட்டு தனது கையினை இழந்த சிறுமி வைசாலி மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று (19.09.2023) மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்த போது சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

பூங்கொத்து வழங்கி வரவேற்பு 

வைசாலி பாடசாலைக்கு சென்ற போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் அவரை பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

யாழில் மீண்டும் பாடசாலை சென்ற சிறுமி வைஷாலி | 8 Years Old Child Hand Operated Issue In Jaffna

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் மூலம் தனது கையின் ஒரு பகுதியை இழந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களினால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் வைசாலிக்கு இந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.