யாழில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 77ஆவது சிரார்த்த தின நிகழ்வு
மகாத்மா காந்தியின் 77ஆவது சிரார்த்த தின நிகழ்வு, காந்தி சேவா நிலையத்தினரின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தின் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்றலில் இடம்பெற்றுள்ளது
யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்நிகழ்வில், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர் மற்றும் காந்தி சேவா நிலைய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் இதன்போது, காந்தியம் காலாண்டு பத்திரிகையும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகை வெளியீடு
குறித்த பத்திரிகையை, யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரி வெளியிட்டு வைக்க யாழ் மாநகர சபை ஆணையாளர் பெற்றுக்கொண்டுள்ளார்.

