விமான நிலையத்தில் விசேட சோதனை: கடத்திவரப்பட்ட பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் மூலம் டுபாயிலிருந்து எடுத்து வரப்பட்ட 70 இலட்சம் பெறுமதியான சிகரெட் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான நிலைய வருகை முனையத்தில் கடமையாற்றிய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் இந்த பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
விசேட சோதனை நடவடிக்கை
டுபாயில் (Dubai) இருந்து ருடு 226 என்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் குழந்தையுடன் பெண் ஒருவர் உட்பட மூன்று பயணிகள் இன்று (01.06.2024) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரின் பயணப்பொதிகளை சோதனையிட்ட சுங்கப்பிரிவினர், 77 புதிய ஸ்மார்ட் ரக தொலைபேசிகளையும், 40,000 வெளிநாட்டு சிகரெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதாக சுங்கப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அத்துடன், மூன்றாவது பயணியான பெண் விமான நிலைய அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக குழந்தையை தன்னுடன் பயணிக்க பயன்படுத்தியுள்ளதாக சுங்கப்பேச்சாளர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |