நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு

By Mayuri Aug 26, 2024 10:25 AM GMT

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் போகமுவ தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற ஒன்பது, ஐந்து வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் தாய் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், தற்போது அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலி

மேலும், இத்தேபான - மேல் கந்தயகிரல பிரதேசத்தில் உள்ள அதவெதுன்வெவ நீர் குளியலில் குளிப்பதற்குச் சென்ற இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு | 7 People Lost Their Lives Due To Drowning

இதேவேளை, கல்பிட்டி இலுப்பத்தீவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த 65 வயதுடைய ஒருவரும் மாரவில - குருசா தேவாலயத்திற்கு அருகில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW