அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

Election
By Mayuri Aug 20, 2024 05:26 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹரீஸுடம் விளக்கம் கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஹரீஸுடம் விளக்கம் கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அஞ்சல் மூல வாக்களிப்பு

மாவட்டச் செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு செப்டெம்பர் 4ஆம் திகதி, அஞ்சல் மூல வாக்களிப்பை செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள் | 7 Lakh Civil Servants Are Eligible To Vote By Post

அதேநேரம் குறித்த 3 தினங்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்புக்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

நீடிக்கவுள்ள மழையுடனான காலநிலை

நீடிக்கவுள்ள மழையுடனான காலநிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW