போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள் கொழும்பில் அடையாளம்
போக்குவரத்து விதிகளை மீறியமை தொடர்பாக சிசிடிவி கமெரா மூலம் 675 வாகனங்கள் கொழும்பில் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
எனினும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்காணிப்பதற்காக புதிய சிசிடிவி கண்காணிப்பு முறை கடந்த 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையிலேயே குறித்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிமீறல்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இருப்பினும், குறித்த போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட சாரதிகளை எச்சரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் கொழும்பு நகரில் சிசிடிவி கமெரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்டதாக அடையாளம் காணப்படும் வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில், தூரப்பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு வரும் சாரதியொருவர் போக்குவரத்து விதிகளை மீறினால், குறித்j நபர் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸ்நிலையம் ஊடாக அபராதப் பத்திரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட மேலும் தெரிவித்துள்ளார்.