5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் கைது

Sri Lanka Police Crime
By Vinoja Jun 13, 2026 06:08 PM GMT

மாதம்பே பகுதியில் ஐந்து வயது மழலையர் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபர் நடத்தி வந்த கடைக்குச் சென்றிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் கைது | 65 Years Man Arrested For Abuse Of 5 Year Old Girl

அப்போது, சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று அவர் பாலியல் தொல்லை வழங்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.சிறுமியின் தாயார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.