இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வூதியம்: கோபா குழுவில் வெளியான தகவல்

Gampaha Sri Lanka Department of Pensions
By Mayuri Jun 27, 2024 01:30 PM GMT
Mayuri

Mayuri

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, ​​இந்த விடயங்கள் தொடர்பான விபரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

துணை கணக்காய்வாளர் ஜெனரல் எம்.எஸ்.நயன குமார இந்தத் தகவலை குழுவில் தெரிவித்துள்ளார்.

முறைகேடு தொடர்பில் வெளிவந்த தகவல்

பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் தவறான செயற்பாடுகளினால் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், முப்படையினருக்கு அதிகளவான ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வூதியம்: கோபா குழுவில் வெளியான தகவல் | 6000 Deceased Have Been Given Pension

இறந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைச் செலவுகளும் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 6,400 சட்டவிரோத ஓய்வூதியங்கள் பதிவாகியுள்ளதாகவும் கோபா குழு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW