கொழும்பில் பாடசாலையொன்றில் கொங்கிறீட் தூண் சரிந்ததில் மாணவர்கள் காயம் (Photos)
Colombo
Sri Lankan Schools
By Mayuri
கொழும்பு - 14 வேரகொட கனிஷ்ட வித்தியாலத்தில் கொங்கிறீட் தூணொன்று சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் வரையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாடசாலைக்குள் பெற்றோர் சென்றுள்ள நிலையில் அங்கு அமைதியின்மை நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.





