இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 58 இலங்கையர்கள் கைது

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Crime
By Laksi Nov 09, 2024 08:37 AM GMT
Laksi

Laksi

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 58 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (09) அதிகாலை கொழும்பு (Colombo) - கிருலப்பனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த போதே சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

மேலதிக விசாரணை

இந்த நிலையில், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 58 இலங்கையர்கள் கைது | 58 Arrested For Financial Fraud Through Internet

இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருவதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகங்கள் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகங்கள் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW