அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதக் கொடுப்பனவு தொடர்பில் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை (12) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவு
இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவை கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்குரிய நீதி வழங்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நியாயமான காரணங்களின்றி குறிப்பிட்ட குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |