நாடு முழுவதும் ஒரே நாளில் 524 பேர் கைது!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jan 24, 2026 12:46 PM GMT
Fathima

Fathima

நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் நேற்று 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, நேற்றைய தினம் 30,236 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரங்க பிடியாணை 

குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 200 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 524 பேர் கைது! | 524 People Arrested In A Single Day

அத்துடன், இந்தச் சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 429 பேரும், கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 53 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,706 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.