பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான உதவித்தொகை

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples
By Rakshana MA Feb 17, 2025 11:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையிலுள்ள பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா(Anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.

இன்று(17) நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

பிள்ளைகளுக்கான உதவித்தொகை

இவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் 2,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும். மீதி 3,000 ரூபாய் அவர்களில் சட்டரீதியான பாதுகாவலருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான உதவித்தொகை | 5000Rs Assistance For Orphaned Children

இதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

மேலும், இந்த பிள்ளைகள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்படுகிள்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

அம்பாறையில் சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை

அம்பாறையில் சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW