5000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்: அமைச்சர் அறிவிப்பு
Ranjith Siyambalapitiya
Ministry of Finance Sri Lanka
Economy of Sri Lanka
By Fathima
மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி நாளைய தினம் (04.07.2023) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி
2019 ஆம் 2020ஆம் மற்றும் 21ஆம் ஆண்டுகளில் உயர்தரத்தில் கல்வி கற்ற 5,000 மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த விண்ணப்பம் கோரல் ஆரம்பமாகவுள்ளது.
உரிய கடன் தொகை பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்பு சார்ந்த கற்கை நெறிகளை கற்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.