நாட்டை விட்டு வெளியேறும் 5000 வைத்தியர்கள் : வெளியான தகவல்

Jaffna Sri Lanka Economic Crisis Jaffna Teaching Hospital Hospitals in Sri Lanka
By Madheeha_Naz Sep 02, 2023 11:42 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்தினசிங்கம் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

ழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான ஒரு தொழிற்சங்கமாக இருக்கின்ற படியால் நாங்கள் சுகாதாரத்துறை சம்பந்தமான பிரச்சினைகளில் அக்கறை செலுத்துவதும் அதில் ஏற்படுகின்ற சாதக பாதக நிலைமைகள் பற்றி ஆராய்வதிலும் அக்கறை செலுத்தி வருகின்றோம்.

அவ்வாறே இந்த மருந்து தட்டுப்பாடு சம்பந்தமாகவும், புத்திஜீவிகள் வெளியேற்றம் முக்கியமாக வைத்தியர்களுடைய வெளியேற்றம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் சுகாதாரத் துறைக்கும் அரசாங்கத்துக்கும் எங்களுடைய முன்மொழிவுகளை வழங்கி இருந்தோம். அது உத்தியோகபூர்வமான கூட்டங்களில் பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்ட போதும் எந்தவிதமான முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

நாட்டை விட்டு வெளியேறும் 5000 வைத்தியர்கள் : வெளியான தகவல் | 5000 Doctors Leaving The Country

முதலாவதாக மருந்து மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாட்டினை உற்று நோக்குவமாக இருந்தால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இது நிலவி வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் தற்போது மருந்தின் தரம் இன்மை தன்மையும் ஆங்காங்கே நிலவி வருகின்றது, அடுத்து புத்துஜீவிகள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதானமான நிலைமை நாட்டின் பொருளாதார நிலமையும், அதனால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவீனமும், மற்றும் எதிர்கால சந்ததியினரது ஸ்த்திரத்தன்மை என்பதும் இதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது.

கிட்டத்தட்ட சுகாதார அமைச்சர் தெரிவித்ததின்படி 850 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள். மேலும் ஐயாயிரம் வரையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முயற்சிகளில் இருக்கின்ற மையும் எங்களுக்கு தெரிய வந்திருக்கின்றது. இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற போது ஒரு ஆளணி பற்றாக்குறை ஏற்படப் போகிறது.

இவ்வாறு ஆளணி பற்றாக்குறை ஏற்படுகின்ற போது ஒரு நோயாளிக்கு ஒரு நிமிடத்திள்குள் மட்டுப்படுத்த வேண்டிய நேரிடும். இவ்வாறு மட்டுப்படுத்துவதினால் சேவையை நாடிவரும் நோயாளிகள் அனைவருக்கும் சேவையினை வழங்க முடியாத நிலையும் ஏற்படலாம் இதனால் நோயாளிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

இவ்வாறு குறுகிய நேரத்துக்கு நோயாளிகளை பார்வையிடுவதால் தரமான சிகிச்சையினை வழங்க முடியாமல் போகலாம். இவ்வாறான பிரச்சினைகள் எங்களுடைய பிரதேசங்களில் வெகுவாக அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் இவற்றை நாங்கள் முதலே ஆராய்ந்து அரசாங்கத்திற்கு அதன் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கின்றோம்.

இந்த நிலை நீடிக்காமல் அரசாங்கம் விரைந்து செயல்பட்டு நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதை தடுப்பதற்குரிய வழிகளை மேற்கொண்டு எங்களுடைய வாழ்க்கைச் செலவை கொண்டு செல்லக்கூடிய வேதனை ஏற்றத்தை வழங்குவதன் மூலம் புத்திஜீபிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதுடன் மருந்து தட்டுப்பாடு நீக்குவதற்குரிய முன்மொழிவுகளின் ஊடாக மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து பாமர மக்களுக்கும் பயன் பெற்று வைத்தியர்களும் நாட்டில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.