சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் அல்ஹிலால் பாடசாலை

Sri Lankan Peoples Grade 05 Scholarship examination Kalmunai School Incident
By Rakshana MA Jan 27, 2025 09:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

அண்மையில் வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில், சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 50 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற காலை ஆராதனை நிகழ்வின்போது அறிமுகம் செய்யப்பட்டு, வாழ்த்தி வரவேற்கப்பட்டனர்.

அத்துடன், இந்த பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 231 மாணவர்களில் ,168 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 219 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேகரிக்க நாடு முழுவதும் நிறுவப்படும் நிலையங்கள்

டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேகரிக்க நாடு முழுவதும் நிறுவப்படும் நிலையங்கள்

தொடர்ந்தும் முதலிடம் 

இந்த நிலையில், இப்பெறுபேறுகளின் பிரகாரம் இந்த பாடசாலை சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன் கல்முனை கல்வி வலயத்திலும் முன்னிலையில் திகழ்கிறது. இதன் மூலம் இப்பாடசாலை வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியிருப்பதாக பாடசாலை சமூகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் அல்ஹிலால் பாடசாலை | 50 Students Graduated From Sainthamaruthu Alhilal

மேலும், இந்த சாதனை பெறுபேற்றினை அடைவதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் உட்பட பிரதி மற்றும் உதவி அதிபர்களுடன் மாணவர்களுக்கு போதித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 2025ம் ஆண்டுக்கான‌ புதிய‌ நிர்வாக‌ம் தெரிவு

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 2025ம் ஆண்டுக்கான‌ புதிய‌ நிர்வாக‌ம் தெரிவு

காஸாவில் அரங்கேறியுள்ள நிகழ்வு! போராளிகளுக்கு கிடைத்த வெற்றி

காஸாவில் அரங்கேறியுள்ள நிகழ்வு! போராளிகளுக்கு கிடைத்த வெற்றி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW