வைத்தியசாலை செல்லும் வழியில் சிறுமி உயிரிழப்பு

By Fathima Apr 29, 2024 02:22 AM GMT

யாழ்பாணத்தில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலை செல்லும் வழியில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (28.4.2024) யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

வைத்தியசாலை செல்லும் வழியில் சிறுமி உயிரிழப்பு | 5 Year Old Girl Died Cz Of Fever In Jaffna

அதனை தொடர்ந்து, நேற்றையதினம் உடல் நிலை மோசமாகியமையால் பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.