வெளிநாடொன்றில் பாரவூர்திகள் மோதி கோர விபத்து: 48 பேர் பலி

Africa Accident World
By Raghav Sep 09, 2024 09:54 PM GMT
Raghav

Raghav

நைஜீரியாவில் (Nigeria) எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது மற்றொரு பாரவூர்தி மோதிய கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியா - அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது, அவ்வீதியின் எதிரே வேகமாக வந்த மற்றொரு பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இப்ராஹிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்திற்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்

இப்ராஹிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்திற்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்

காவல்துறை விசாரணை

இந்த கோர விபத்தில் 2 பாரவூர்திகளும் வெடித்து சிதறியதில் 48 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வெளிநாடொன்றில் பாரவூர்திகள் மோதி கோர விபத்து: 48 பேர் பலி | 48 Killed After Fuel Truck Explodes In Nigeria

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது மன்னிப்பு காலத்தை அறிவித்துள்ள ஐக்கிய அரபு இராச்சியம்

பொது மன்னிப்பு காலத்தை அறிவித்துள்ள ஐக்கிய அரபு இராச்சியம்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டு இரத்து

பங்களாதேஷ் முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டு இரத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW