இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

By Fathima Jun 02, 2024 05:45 AM GMT
Fathima

Fathima

சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் சுமார் 45% பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவிட் தொற்று நோய்களின் போது அத்தியாவசிய தேவைகளை மேற்கொண்ட விமானங்களின் பராமரிப்புக்காக செலவிடப்படும் பெரும் தொகையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விமானப்படையின் கிங் ஏர் பி200 பீச் கிராஃப்ட் விமானம் கடல் மற்றும் நில கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல்

மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சோதனைகளை நடத்துவதற்கும், பரந்த பகுதியை கண்காணிக்கவும் இந்த விமானம் போதுமானதாக இல்லை எனவும் தெரியவந்துள்ளது

இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் | 45 Percent Of Air Force Aircraft Unserviceable

இந்த பிரச்சினைக்கு தீர்வாக, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அரசிடம் இருந்து இரண்டு விமானங்களை இலங்கை விமானப்படை பெற உள்ளது.

இந்த விமானத்தின் தற்போதைய மதிப்பு பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களை பெறுவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தையும் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது.