4,000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
By Dharu
வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு விரைவாக புதிய ஆட்களை இணைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய நியமனம்
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
மேலும் மக்களின் இடர்களை அரசாங்கம் என்ற தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.