வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சேதமடைந்த பிரதான பாலங்களை புனரமைக்கக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கன்டம்பி தெரிவித்துள்ளார்.
பிரதான வீதிகள்
அத்துடன் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பிரதான வீதிகளை 3 மாத காலப்பகுதிக்குள் புனரமைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், சுமார் 40 பாலங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை மீட்டெடுக்க 18 மாதங்கள் (ஒன்றரை ஆண்டுகள்) வரை கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் 'A' மற்றும் 'B' தர வீதிகளுக்கு புயலால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 190 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.