வாழைச்சேனை பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு : நால்வர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை(Valaichenai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படையினரின் திடீர் சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(05) இடம்பெற்றுள்ளது.
மேலும், இதில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 போதை மாத்திரைகள், 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
அத்துடன் இச்சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஓட்டமாவடி பிரதேச பெண்கள் பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் 32 வயதுடைய ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏனைய மூவரும் 15 வயது மற்றும் 30, 31 வயதுடையவர்கள் என்பதுடன், நால்வரும் ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப்பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |