மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

Batticaloa Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Eastern Province Medicines
By Rakshana MA Apr 30, 2025 06:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்தில் மத்தி வலயத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவபீடத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் கல்வியாண்டில் மருத்துவபீடத்திற்கு திறமை அடிப்படையில் 37 மாணவர்களுக்கும், மாவட்ட ஒதுக்கீடு மற்றும் பின்தங்கிய பிரதேச ஒதுக்கீடு அடிப்படையில் 38 மாணவர்களுக்கும் மருத்துவபீடத்திற்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், இந்த தடவையும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் மருத்துவபீடத்திற்கு அனுமதி பெற வாய்ப்புண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அதிரடி கைது!

மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அதிரடி கைது!

மட்டக்களப்பு மாவட்ட சாதனை 

அதன்படி, ஆண்கள் - 33(44%) மற்றும் பெண்கள் - 42(56%) இலும், Rank 1 -37 வரையிலான மாணவர்கள் திறமை அடிப்படையிலும் (Merit Based) மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Rank 38 -75 வரையிலான மாணவர்கள் மாவட்ட ஒதுக்கீடு மற்றும் பின்தங்கிய பிரதேச ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறுவர்.

இவ் வருடமும் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்தே பெருமளவு மாணவர்களுக்கு மருத்துவ பீடத்திற்கு அனுமதி கிடைக்கும்.

  • மட்டக்களப்பு மத்தி வலயம் -30 (41%)
  • மட்டக்களப்பு வலயம் -25
  • பட்டிருப்பு வலயம் -13
  • கல்குடா வலயம் -05
  • மட்டக்களப்பு மேற்கு வலயம் -01

மேலும் 76 - 79 Rank வரை பல் மருத்துவபீடத்திற்கும் 80-84 Rank வரை விலங்கு மருத்துவபீடத்திற்கும் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு | 37 Medical Students Selected From Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பின்வரும் பாடசாலைகளில் முதலாம், இரண்டாம் தடவை தோற்றி,மருத்துவபீடத்திற்கு அனுமதி பெற்ற மாணவர் தொகை.

  • மட்/காத்தான்குடி மீராபாலிகா ம.வி -07
  • மட்/வின்சென்ட் மகளிர் கல்லூரி -08
  • மட்/பட்டிருப்பு மத்திய கல்லூரி -08
  • மட்/புனித மிக்கேல் கல்லூரி -07+02 =09
  • மட்/ஏறாவூர் அலிகார் -05
  • மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரி -04
  • மட்/சிவானந்த வித்தியாலயம் -02
  • மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி -02
  • மட்/காத்தான்குடி மத்திய கல்லூரி -03
  • மட்/பெரிய கல்லாறு மத்திய கல்லூரி -02
  • மட்/கோட்டைக் கல்லாறு ம.வி. - 02
  • மட்/செங்கலடி மத்திய கல்லூரி - 02
  • மட்/அல் ஹிதாயா ம.வி - 03
  • மட்/அல் ஹிரா வித். -01
  • மட் புனித சிசிலியா மகளிர் கல்லூரி -01
  • மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரி -01
  • மட்/ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயம் -01
  • மட்/ஏறாவூர் ரகுமானியா வித்தியாலயம் -01
  • மட்/துறை நீலாவணை ம.வி. - 01
  • மட்/கிரான் மத்திய கல்லூரி - 01
  • மட்/வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம் -01
  • மட்/முதலைக்குடா ம.வி - 01
  • மட்/வாழைச் சேனை அந்நூர் தேசிய பாடசாலை - 01

இது தவிர, தனிப்பட்ட பரீட்சார்த்தியாக இரண்டாவது/ மூன்றாவது தடவையாக தோற்றிய 08 மாணவர்களுக்கும் மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறத்தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினொராம் மாதத்தின் முதல் நாள் இன்று..

பதினொராம் மாதத்தின் முதல் நாள் இன்று..

துருக்கியின் இராணுவ விமானங்கள் பாகிஸ்தானில்....வெளியான தகவல்

துருக்கியின் இராணுவ விமானங்கள் பாகிஸ்தானில்....வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW