மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அதிரடி கைது!

Batticaloa Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka Eastern Province
By Rakshana MA Apr 29, 2025 12:05 PM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையினை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மாறுவேடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம், உணவுக் கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகபதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார்.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

இதனையடுத்து, குறித்த கடடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்கழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று(29) பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதியில் வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அதிரடி கைது! | Public Health Inspector Arrested In Batticaloa

இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை வாங்கிய நிலையில், அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.      

அரச ஊழியர்கள் குறித்து வெளிவந்துள்ள தகவல்

அரச ஊழியர்கள் குறித்து வெளிவந்துள்ள தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW