சாவகச்சேரி படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்(Photos)

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Madheeha_Naz Oct 28, 2023 07:21 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

யாழில் சாவகச்சேரி படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தலானது சாவகச்சேரிப் பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று(27.10.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் பாரிய தீ விபத்து! மற்றுமொரு வர்த்தக கட்டடம் பாதிப்பு

அதிகாலையில் பாரிய தீ விபத்து! மற்றுமொரு வர்த்தக கட்டடம் பாதிப்பு

நினைவேந்தல்

இதன் போது 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியை அண்மித்து இந்திய விமானப்படையின் மிலேச்சத்தனமான தாக்குதலில் பலியான 68 பொதுமக்களுக்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்(Photos) | 36Thanniversary Commemoration Savagacheri Massacre

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் வீ.விஜயேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், உயிரிழந்த பொதுமக்களின் உறவுகள், பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கந்தசஷ்டி விரத இறுதி நாளில் சூரன் தாங்கிய ஊர்தியை இலக்கு வைத்து இந்திய விமான படையின் இரண்டு உலங்குவானூர்திகள் நடத்திய தாக்குதலில் 68பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 175பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்(Photos) | 36Thanniversary Commemoration Savagacheri Massacre

கோர விபத்தில் இளம் பெண் பலி: கோபத்தில் வெடித்த வன்முறை

கோர விபத்தில் இளம் பெண் பலி: கோபத்தில் வெடித்த வன்முறை

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு வேலைவாய்ப்பு: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு வேலைவாய்ப்பு: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

GalleryGalleryGalleryGallery