யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு

Jaffna Sri Lanka Parliament Election 2024
By Rakesh Dec 08, 2024 08:35 AM GMT
Rakesh

Rakesh

யாழ்ப்பாணம் (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 396 வேட்பாளர்களில் 362 வேட்பாளர்கள் தமது தேர்தல் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேl;சைக் குழுக்களும் போட்டியிட்டன.

இரண்டிலுமாகச் சேர்த்து 396 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

396 வேட்பாளர்கள் 

தேர்தல் முடிவடைந்த பின்னர் வேட்பாளர்கள் தமது கணக்கறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்பது இம்முறை கட்டாய சட்டமாக்கப்பட்டிருந்தது.

யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு | 362 Candidates Submit Election Accounts In Jaffna

நேற்றுமுன்தினம் நள்ளிரவு வரை அதற்காக அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 396 வேட்பாளர்களில் 362 வேட்பாளர்கள் தமது தேர்தல் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

மாவடிப்பள்ளி அனர்த்தம்! மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு

மாவடிப்பள்ளி அனர்த்தம்! மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு