இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்..! வெளியான தகவல்
2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,204,046 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவியும் பயணிகள்
கடந்த 2024 ஆம் ஆண்டில், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்தனர்.
இந்தநிலையில் இந்த ஆண்டு, முந்தைய ஆண்டை விட வேகமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சுற்றுலாத் துறையில் மீட்சியை பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் சுற்றுலா தளம்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 8,053 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 பேர், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர், மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |