3000 மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு

Food Shortages Children's Day Girl child day Sri Lanka Food Crisis Sri Lankan Schools
By Fathima Sep 30, 2023 02:48 PM GMT
Fathima

Fathima

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும், இந்த சிறுவர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பின்மை

பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை வறுமை உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த சிறுவர்கள் போசாக்கு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

3000 மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு | 3000 Children Affected Malnutrition In Kilinochchi

அதாவது 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 2765 க்கு மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இவ்வாறு போசாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1288 சிறுவர்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 884 சிறுவர்களும் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 393 சிறுவர்களும் இவ்வாறு போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின் தகவல்கள் மூலம் அறிய முடிந்துள்ளது.