அம்பாறையில் வெள்ளம் மூழ்கடித்த வயல் நிலங்கள் : நாடாளுமன்றில் சுசில் ரணசிங்க
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 3,000 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க(Susil Ranasingha) தெரிவித்துள்ளார்.
இன்று (21) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீர் வடிகால் அமைப்பில் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெற்பயிர்களின் அழிவு
இந்த நிலையில், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
வெள்ளத்தில் மூழ்கிய 3,000 ஏக்கர் நெற்பயிர்களில் சுமார் 1,000 ஏக்கர் வயல்கள் நீர் வடிந்தோடியதன் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளது.
மேலும் 1,000 ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற முடியுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |