இலங்கை மின்சார சபைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

Sri Lanka Ceylon Electricity Board Asian Development Bank Economy of Sri Lanka
By Laksi Dec 10, 2024 02:39 PM GMT
Laksi

Laksi

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி வசதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, எரிசக்தி துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி வசதி பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

மின்சார உற்பத்தி

இவ்வாறான முறையில் இலங்கைக்கு வழங்கப்படும் முதலாவது நிதி வசதி இதுவாகும்.

இலங்கை மின்சார சபைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி | 30 Million Dollar Fund For Sl Electricity Board

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல் மற்றும் இத்துறையில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் 70% மின்சார உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அடைய இந்த வேலைத்திட்டமும் முக்கியமானது என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW