30 வீத குழந்தைகள் முன்பள்ளிக்கு செல்வதில்லை: கல்வி அமைச்சர்

Education
By Madheeha_Naz Jan 29, 2024 09:30 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

நாட்டில் 4 வயதுடைய குழந்தைகளில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது எனவும் உலகில் இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் சுமார் 6000 முன்பள்ளி டிப்ளோமாதாரிகள் இருப்பதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி கொள்வனவுச் செய்வதற்கான இலவச வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இந்த இலவச பாதணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் குறித்த வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது.