ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

By Madheeha_Naz Jun 28, 2024 04:59 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பரில், தெமட்டகொட பிரதேசத்தில் தமது காரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக ஹிருணிகா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு

குறித்த குற்றச்செயல் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தனர்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை | 3 Years Imprisonment For Hirunika Premachandra

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் முன்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW