காத்தான்குடியில் ஐஸ்போதைப் பொருளுடன் 3 பேர் கைது

Sri Lanka
By Nafeel May 10, 2023 04:38 PM GMT
Nafeel

Nafeel

காத்தான்குடி பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் 300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேரை இன்று புதன்கிழமை (10) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான இன்று பகல் காத்தான்குடி பர்ஸான் வீதியில் வைத்து 25 மற்றும் 28 வயதுடைய இருவரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 50, மற்றும் 60 மில்லிக்கிராம் ஐஸ்போதைப்பொருளை மீட்டனர்.

அதேவேளை ரெலிகோம் வீதியில் வைத்து 190 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருளுடன் 33 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

இவ்வாறு இரு வேவ்வேறு சம்பவங்களில் 300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 3 பேரை கைது செய்ததுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.