வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
அண்மையில் அடை மழையினால் வெள்ளநிலைமை உருவாகியுள்ள இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டொக்டர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
வெள்ளம் ஏற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இத்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளப்பிரதேசங்கள்
அசாதரண நிலைமை காரணமாக ஆபத்திலிருந்த மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள 22 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குட்பட்ட பகுதிகளையும் மையப்படுத்தி இவ்வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் இது வரையில் 41,212 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்படடுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையான 17,472 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மக்கள் தங்களது சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், இச்சுகாதார பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |