ஆயிரக்கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து: வெளியான காரணம்
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Vehicles) பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க (Nishantha Anurudtha Weerasinghe) தெரிவித்துள்ளார்.
சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்துக்கள்
இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பேராசிரியர் மொஹமட் மஹீஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, வாகனத்தை இயக்குவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பேராசிரியர் மொஹமட் மஹீஷ் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |