மன்னாரில் இருந்து கொழும்புக்கு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட கேரளா கஞ்சா

Colombo Mannar Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 10, 2024 02:53 PM GMT
Harrish

Harrish

மன்னார்(Mannar) - பேசாலை பகுதியிலிருந்து கொழும்பு(Colombo) நோக்கி கடத்தப்பட்ட கேரளா கஞ்சா வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (10.07.2024) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

மன்னார், பேசாலை பகுதியிலிருந்து கூலர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட போதே பொலிஸார் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

மன்னாரில் இருந்து கொழும்புக்கு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட கேரளா கஞ்சா | 28Kg Kerala Ganja Smuggled From Mannar To Colombo

இந்த கைது நடவடிக்கையின் போது 28 கிலோ 760 கிராம்  கேரளா கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கூலர் ரக வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான பேசாலை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையை இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இருந்து கொழும்புக்கு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட கேரளா கஞ்சா | 28Kg Kerala Ganja Smuggled From Mannar To Colombo

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW