இலங்கை பாடசாலை மாணவர்கள் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் 16 சதவீதமான பாடசாலை மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வைத்திய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் அநுராதபுரம் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜயந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
அறிக்கை
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களில் 28 சத வீதமானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதாரப் பிரச்சினையால் குடும்பங்களில் ஏற்படும் வருமானமின்மையே இதற்கு முக்கிய காரணம் எனவும் இதனால் பாடசாலை மாணவர்களின் சுறுசுறுப்புத் தன்மையும் குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.