புதிய கடவுச்சீட்டுகாக 26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விண்ணப்பம்

Immigration Department of Immigration & Emigration Passport Arun Hemachandra
By Vethu Mar 10, 2025 07:06 AM GMT
Vethu

Vethu

புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக 26,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்தா தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களுக்கு கிடைத்துள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளாகப் விண்ணப்பங்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

சில தனிநபர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் காலாவதியாகிவிட்டதால் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு

இதனால் வெளிநாடுகளில் படிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கடவுச்சீட்டுகாக 26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விண்ணப்பம் | 26000 Foreigners Apply For New Passports

இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குவதற்காக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.