கணினி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

Sri Lanka Politician Sri Lanka Cyber Attack
By Fathima Nov 20, 2025 10:01 AM GMT
Fathima

Fathima

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு, இன்று (20) கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முறைப்பாடுகள் 

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கணினி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் | 25 Computer Allegations Registered Daily

மேலும், 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகங்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் வெளிப்படுத்தினார்.