ஆரையம்பதி பிரதான வீதியில் ஒரு வருடத்தில் 25 க்கும் அதிகமான விபத்துகள்

Batticaloa Sivanesathurai Santhirakanthan Accident Death
By Fathima Aug 15, 2023 03:32 PM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி நெடுஞ்சாலையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கோடு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (15.08.2023) செவ்வாய்கிழமை, கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய, மண்முனைபற்று பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது

ஆரையம்பதி பிரதான வீதியில் ஒரு வருடத்தில் 25 க்கும் அதிகமான விபத்துகள் | 25 Accidents In One Year In Arayampati Road

வருடத்திற்குள் 25 இக்கு மேற்பட்ட விதி விபத்துக்கள்

அரையம்பதி வைத்தியசாலை தொடக்கம் பொதுச் சந்தை வரையிலான சுமார் 150 தொடக்கம் 200 மீட்டர் இடைவெளியில் கடந்த ஒரு வருடத்திற்குள் 25 இக்கு மேற்பட்ட விதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இதில் பாதையை கடக்க முற்பட்ட 06 பேர் மரணமடைந்துள்ளனர். இது மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ள இந்நிலைமையைக் கட்டுப்படுத்தி, பாதுகாப்பாக பாதசாரிகள் கடமையினை எவ்வாறு மேற்கொள்வது, வீதி விபத்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவாக இதன்போது ஆராயப்பட்டதுடன் உரிய நடவடிக்கைகளுக்கும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் சர்வேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், காத்தான்குடி பொலிஸ் நிலைய துணை பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரையம்பதி பிரதான வீதியில் ஒரு வருடத்தில் 25 க்கும் அதிகமான விபத்துகள் | 25 Accidents In One Year In Arayampati Road